நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் பிறமாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். இந்தச் சூழலில், கடந்த ஆண்டு ஜனவரியில், கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், விசாரணைக்கு வாய்ப்பு கொடுக்காத, பெண்களுக்கு சம உரிமையும் மரியாதையும் கொடுக்காத காரணங்களுக்காக தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தமிழக பாஜகவையும், அக்கட்சியின்ம் மாநில தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்து வந்தார். இந்த நிலையில், இன்று (19) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். இதனை அதிமுக செய்தித் தொடர்பாளர் சிஆர்டி நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Leave Comments